நடிகர் விஜய் லியோ படத்தில் அவரது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
சில நாட்களுக்கு முன்பாக மடோனா செபாஸ்டியன், வையாபுரி, கைதி படத்தில் நடித்த நரேன், அர்ஜுன் தாஸ், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரும் படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான நான் ரெடி தான் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் லியோ படத்தில் அவரது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நம்முடைய இரண்டாம் கூட்டணியை மேலும் அழகானதாக மாற்றியதற்கு நன்றி விஜய் அண்ணா என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.