லியோ படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. மிக பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. நான் ரெடி பாடல் மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் டிரைலர் மற்றும் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கன்னட போஸ்டர் மற்றும் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது தமிழ் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.