Homeசெய்திகள்சினிமாரூ.1 லட்சத்திற்கு லியோ டிக்கெட் வாங்கிய ரசிகர்

ரூ.1 லட்சத்திற்கு லியோ டிக்கெட் வாங்கிய ரசிகர்

-

கோவில்பட்டியில் ரசிகர் ஒருவர் லியோ திரைப்படத்தின் டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ படத்தை தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மட்டுமன்றி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் படத்தை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தனர். முதல் நாளில் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூல் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
"ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது"- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!
Video Crop Image
இந்நிலையில், கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர், லியோ பட டிக்கெட்டை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். விஜய் ரசிகர் மன்றத்திடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அவர் டிக்கெட் வாங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பணம் விஜய்யின் இலவச கல்வி பயிலகத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்னதாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘லியோ’ திரைப்படம் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்று வசூலை குவித்து வருகிறது.

MUST READ