Homeசெய்திகள்சினிமாஒருவழியா சொல்லிட்டாங்கப்பா... 'லியோ' ட்ரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

ஒருவழியா சொல்லிட்டாங்கப்பா… ‘லியோ’ ட்ரைலர் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

-

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் யோ திரைப்படம் உருவாகியுள்ளது. மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் உருவாகி உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் விஜயுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சமீப காலமாக அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டனர். அதன்படி இன்று காலை திரிஷாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இதற்கிடையில் லியோ படத்தின் டிரைலர் இன்று (அக்டோபர் 5) வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி லியோ படத்தின் டிரைலர் இன்று 6:30 மணி அளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில் இந்த போஸ்டர் வெளியாகி இருப்பது சம்பவம் உறுதி என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ