யூடியூபர் வி.ஜே.சித்து மீது புகார்… நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…
- Advertisement -
டிடிஎஃப் வாசனை தொடர்ந்து மற்றொரு யூடியூப் பிரபலமும், போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார் எழுந்துள்ளது.

Twin Throttlers என்னும் யூட்யூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். கோவையை பூர்விகமாக கொண்ட டிடிஎஃப் வாசன் பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை செல்போனில் வீடியோ எடுத்தபடி அவர் கார் ஓட்டிச் சென்றதாக அவர் மீது புகார் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தற்போது அதேபோல, பிரபல யூடியூபரும், விஜேவுமான சித்து, செல்போனில் பேசிய படி காரை ஓட்டிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், தற்போது டிடிஎஃப் வாசன் செய்த அதே தவறை சித்து செய்திருப்பதாகவும், அவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அண்மைக் காலமாக விஜே சித்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளார். மொட்டைமாடி பார்ட்டி என்ற பெயரில் அவர், திரைக்கு வரும் புதிய திரைப்படங்களுக்கு புரமோசன் செய்து வருகிறார். அதே சமயம், யூடியூபிலும் அவருக்கு லட்சக்கணக்கில் ஃபாலோவர்கள் உள்ளனர்.