Homeசெய்திகள்சினிமாலாக்டவுன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு

லாக்டவுன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு

-

அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் லாக்டவுன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இத்திரைப்படம் பெரும் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் டோலிவுட்டிலும் தடம் பதித்தார்.  மலையாளத்திலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியதால், முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.
தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன், மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் மாறி மாறி அடுத்தடுத்து நடித்து வந்தார். இதில் தெலுங்கில் மட்டு்ம் அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்களை வெகுவாக் கவர்ந்தார். இதன் மூலம் தனது சம்பளத்தையும் வெகுவாக உயர்த்தினார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் லாக்டவுன் என்ற திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இந்நிலையில், லாக்டவுன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படம் மட்டுமன்றி மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.

MUST READ