Homeசெய்திகள்சினிமாஇது என்ன புது கதையா இருக்கு... கதாநாயகன் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத்!

இது என்ன புது கதையா இருக்கு… கதாநாயகன் ஆகும் லோகேஷ் கனகராஜ், அனிருத்!

-

புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முதல் முறையாக சினிமாடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கி இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் நம்ம லோகேஷ்.

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே உருவாகியுள்ளது. ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக லோகேஷுக்கும் தற்போது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக சினிமாவின் அறிமுகம் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மட்டுமில்ல நம்ம ராக் ஸ்டார் அனிருத்தும் அந்தப் படத்தில் நடிக்கிறார். ஸ்டாண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படத்தை இயக்குகின்றனராம்.

இந்த அப்டேட்டை நம்ம சமுத்திரக்கனியே கொடுத்திருக்கிறார். மாஸ்டர் படத்தில் கடைசி ஒரு  காட்சியில் மட்டும் நடித்திருந்தார் லோகேஷ். தற்போது முழுநேர நடிகராக மாற உள்ளார்.

இந்த அப்டேட் ரசிகர்களுக்கு முற்றியிலும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் ஆக்டர் லோகி!

MUST READ