Homeசெய்திகள்சினிமா2025 தீபாவளியை குறிவைக்கும் லோகேஷ்.... தள்ளிப்போகும் 'கூலி'!

2025 தீபாவளியை குறிவைக்கும் லோகேஷ்…. தள்ளிப்போகும் ‘கூலி’!

-

- Advertisement -

கூலி படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.2025 தீபாவளியை குறிவைக்கும் லோகேஷ்.... தள்ளிப்போகும் 'கூலி'!

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 2025 தீபாவளியை குறிவைக்கும் லோகேஷ்.... தள்ளிப்போகும் 'கூலி'!மேலும் பாலிவுட் நடிகராக அமீர் கான் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தது. இவ்வாறு கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இப்படத்தை எப்போது திரையில் காண்போம் என்ற ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் தூண்டிவிடுகிறது. இந்நிலையில் தான் இந்த படமானது 2025 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் இப்படம் 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என புதிய தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கூலி திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 2025 மார்ச் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் இந்தப் படத்தை 2025 தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர இருப்பதாகவும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. 2025 தீபாவளியை குறிவைக்கும் லோகேஷ்.... தள்ளிப்போகும் 'கூலி'!இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தாலும் இப்படம் தள்ளிப்போய்க் கொண்டே இருப்பது சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் கூலி படத்தின் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ