லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ், கைதி 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ், ஃபைட் கிளப் எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் மிஸ்டர் பாரத் எனும் புதிய படத்தையும் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் லோகேஷ். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார்.
நிரஞ்சன் இந்த படத்தை இயக்குகிறார். ஓம் நாராயண் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க பிரணவ் முனிராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பாரத்துடன் இணைந்து சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. கலகலப்பான இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.