Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்..... பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை!

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்….. பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்..... பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை!அதேசமயம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவ்வாறு அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ள சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின்படி சூர்யா- சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்..... பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை! இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதாவது அவருடைய கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்க லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவருக்கு தம்பியாக நடித்தால் நன்றாக இருக்காது என இந்த படத்தில் நடிப்பதற்கு லோகேஷ் கனகராஜ் நோ சொல்லிவிட்டதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்த லோகேஷ் கனகராஜ்..... பிரபல நடிகரிடம் பேச்சு வார்த்தை! மேலும் அவருக்கு பதிலாக பிரபல நடிகர் அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படத்தில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ