Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'எல்சியு' ஆவணப்படம்!

அடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் ‘எல்சியு’ ஆவணப்படம்!

-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், கார்த்தி நடிப்பில் கைதி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'எல்சியு' ஆவணப்படம்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தது மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் எல்சியு – LCU (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) ஆவணப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் எல்சியு என்ற கான்செப்ட்டை உருவாக்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கியிருந்த கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் எல்சியு வில் அடங்கும். அடுத்தது இவர் கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் எல்சியு உருவான விதம் குறித்து ஒரு ஆவணப்படமாக உருவாக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அடுத்த ஆண்டில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் 'எல்சியு' ஆவணப்படம்!அதன்படி இந்த ஆவணப்படத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன், அனிருத் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். அடுத்தது இந்த ஆவணப்படத்திற்கு பிள்ளையார் சுழி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கும் இந்த ஆவணப்படமானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ