Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு ஸ்டைலில் அமைந்து ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளன. இதுவரை லோகேஷ் இயக்கிய அனைத்து படங்களும் ரிப்பீட் மோடில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடும் படியான வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. மேலும் ஹாலிவுட் படங்களின் மார்வெல்ஸ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தமிழ் சினிமாவின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற தனி திரை உலகத்தை உருவாக்கிய பெருமையும் லோகேஷை தான் சேரும். இவருடைய முதல் படமான மாநகரம் இவருக்கு அடையாளத்தை பெற்று தர, இரண்டாவது படமான கைதி இவரை உச்சத்தில் ஏற்றியது. அதைத்தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர், கமலஹாசனின் விக்ரம், மீண்டும் தளபதியுடன் இணைந்து லியோ என அடுத்தடுத்த பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். இவருடைய லிஸ்டில் அடுத்து வரவுள்ள படங்கள் அனைத்திற்கும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார். மேலும் ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி, கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்கள் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் வர உள்ளன. தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்!இந்நிலையில்தான் தலைவர் 171 படத்தில் லோகேஷ் புதிய யுக்தியை கையாள உள்ளார். விக்ரம், கைதி, லியோ போன்ற படங்கள் LCU வில் ஏற்கனவே இணைந்து விட்டன. இதில் லியோ படத்தில் விக்ரம் மற்றும் கைதி படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இடம்பெறுவர் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். எனவே லியோ படம் குறித்த ரசிகர்களின் கற்பனையான பல கட்டு கதைகளும் இணையத்தை ஆக்கிரமித்து வந்தன. இது லியோ படத்தின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றி விட்டது. ஆனால் படத்தை திரையரங்களில் பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள் என்பதுதான் உண்மை. கைதி படத்தில் வந்த ஜார்ஜ் மரியான் மற்றும் விக்ரம் படத்தில் வந்த மாயா கிருஷ்ணன் போன்றோர் மட்டுமே சில காட்சிகளில் லியோ படத்தில் முகம் காட்டினர். படத்தின் கிளைமாக்ஸ் சீனில் கமலஹாசனின் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்து முகம் காட்டும்படியான காட்சிகள் ஏதும் இல்லை என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது உருவாகவிருக்கும் தலைவர் 171, LCU வில் வருமா அல்லது தனி படமா என்று ரசிகர்கள் ஆராயத் தொடங்கி விட்டனர். இதிலும் பல LCU கதாபாத்திரங்கள் நடிப்பர் எனவும் இப்போதே கதைகள் வலம் வர தொடங்கி விட்டன. இந்த எதிர்பார்ப்பு படத்தின் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே லோகேஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதுவரை லோகேஷ் இயக்கிய படங்களில் நடித்த எந்த ஒரு கதாபாத்திரமும் தலைவர் 171 படத்தில் இருக்கப் போவதில்லை என திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளாராம்.தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் பிளான்! எனவே இது ரசிகர்களின் கற்பனை வளையத்தை சுருக்கிவிடும்.படத்தின் கதை என்ன என்பதை திரையரங்குகளில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது அது ரசிகர்களை முழு திருப்திப்படுத்தும் என்ற காரணத்தினால் தான் லோகேஷ் இந்த முடிவை எடுத்துள்ளார். லோகேஷ், ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படமும் கேங்ஸ்டர் படம் தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ