ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளார். அவரது படங்களுக்கு இந்திய அளவில் வெறித்தனமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அவர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனராக பெரும் வெற்றி பெற்ற லோகேஷ் தற்போது நடிகராகவும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்து புதிய படத்தில் கதாநாயகர்களாக நடிக்க இருக்கிறார்களாம்.
இந்தப் படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.
ஆர்ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.