சூரி நடிக்கும் மாமன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூரி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூரி, விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தினை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹேசம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைக்க தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்திற்கு மாமன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தலைப்பை பார்க்கும் போது நடிகர் சூரி இந்த படத்தில் தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதே சமயம் இந்த படத்தில் நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்துடன் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகாவும் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை சுவாசிகா, நடிகர் சூரியின் சகோதரியாக நடிக்கிறாராம். இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.