Homeசெய்திகள்சினிமாஒத்திவைக்கப்பட்ட 'லப்பர் பந்து' ஓடிடி ரிலீஸ்!

ஒத்திவைக்கப்பட்ட ‘லப்பர் பந்து’ ஓடிடி ரிலீஸ்!

-

லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஒத்திவைக்கப்பட்ட 'லப்பர் பந்து' ஓடிடி ரிலீஸ்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே, பார்க்கிங் உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். அதே சமயம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் டீசல் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இன்னும் சில படங்களிலும் கமிட்டாகி வருகிறார் ஹரிஷ் கல்யாண். இதற்கிடையில் இவர், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருந்தார். தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒத்திவைக்கப்பட்ட 'லப்பர் பந்து' ஓடிடி ரிலீஸ்!மேலும் திரைப்படங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் லப்பர் பந்து திரைப்படம் நாளை (அக்டோபர் 18) சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருவதால் இதன் ஓடிடி ரிலீஸ் செய்தியை ஒத்தி வைத்துள்ளதாக சிம்ப்ளி சௌத் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்துல அறிவித்துள்ளது. விரைவில் புதிய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ