Homeசெய்திகள்சினிமாபிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'லூசிபர் 2'..... ஷூட்டிங் குறித்த அறிவிப்பு!

பிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லூசிபர் 2’….. ஷூட்டிங் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

லூசிபர் 2 படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ், மோகன்லால் கூட்டணியில் லூசிபர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரித்திவிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான இந்த படம் குறுகிய காலத்தில் அதிக வசூலை ஈட்டி தந்தது. அரசியல் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் மலையாள ரசிகர்கள் இடையே மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது 3 வருடங்களுக்குப் பிறகு லூசிபர் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருக்கிறார். எம்புரான் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் மோகன்லால் உடன் இணைந்து பிரித்விராஜ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கும் என படக் குழுவினர் அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ