Homeசெய்திகள்சினிமாமலையாளத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் லிடியன் நாதஸ்வரம்

மலையாளத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் லிடியன் நாதஸ்வரம்

-

- Advertisement -
மலையாள திரையுலகில் லாலேட்டனாக அனைவராலும் கொண்டாடும் நாயகன் மோகன்லால். 80-களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. காலத்திற்கேற்ப கதைக்களத்தையும் தேர்வு செய்து சிறந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. மலையாளத்தில் வசூலைக் குவித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் ஆனது. மோகன்லால் நடிப்பில் இறுதியாக நேரு, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படங்கள் வெளியாகின.

இதனிடையே மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு திரைப்படம் பரோஸ். ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் மோகன்லால் நடிக்க மட்டும் இல்லை, இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் மாயா, சீசர் ராடன், கல்லிரோய் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு லியிடன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி கொச்சி, கோவா, சென்னையில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

MUST READ