Homeசெய்திகள்சினிமா'பள்ளி குழந்தைகளைக் கெடுக்கும் காதல் இல்லை'..... மறக்குமா நெஞ்சம் படம் குறித்து பாடலாசிரியர் தாமரை!

‘பள்ளி குழந்தைகளைக் கெடுக்கும் காதல் இல்லை’….. மறக்குமா நெஞ்சம் படம் குறித்து பாடலாசிரியர் தாமரை!

-

'பள்ளி குழந்தைகளைக் கெடுக்கும் காதல் இல்லை'..... மறக்குமா நெஞ்சம் படம் குறித்து பாடலாசிரியர் தாமரை!விஜய் டிவி புகழ் ரக்சன் கதாநாயகனாக நடித்துள்ள படம் மறக்குமா நெஞ்சம். இந்தப் படத்தை யோகேந்திரன் இயக்க பிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் ரக்சன் உடன் இணைந்து தீனா, முனீஸ்காந்த், மளினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஆசிரியராக பணியாற்றிய தாமரை இப்படம் குறித்த விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “மறக்குமா நெஞ்சம் படம் என்பது பள்ளி காதலாக இருக்குமோ என்று தோன்றும். பள்ளி காதல் தான் ஆனால் பள்ளிக் குழந்தைகளை கெடுக்கும் காதல் இல்லை. பள்ளிக் குழந்தைகளின் காதல் படங்களுக்கு தணிக்கை குழு U சான்றிதழ் தர மாட்டார்கள். 'பள்ளி குழந்தைகளைக் கெடுக்கும் காதல் இல்லை'..... மறக்குமா நெஞ்சம் படம் குறித்து பாடலாசிரியர் தாமரை!இந்த படத்தில் ஒரு வேடிக்கை நடந்துள்ளது. ஆரம்பத்தில் படத்தின் முன்னோட்டத்தை பார்த்து தணிக்கை குழு U/A சான்றளித்தது. அதன்பின் இறுதித் தணிக்கைக்கு போனபோது படத்தின் நோக்கம், நாகரீகம், குலையாத காட்சிகள், அனைவரும் பார்த்து ரசிக்கும் படியான அமைப்பு ஆகியவற்றைப் பார்த்து வியந்து U அளித்துள்ளார்கள். மேலும் இப்படத்தில் மது அருந்துதல், புகைப்பிடித்தல், மலினமான நகைச்சுவை போன்ற கசப்புகள் கிடையாது. ஆரம்பத்தில் இயக்குனர் யோகேந்திரன் என்னிடம் கதை சொன்ன போது புகைப்பிடித்தல், மது காட்சிகள் இருந்தன. இவையெல்லாம் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? என்று நான் கேட்டேன். நாம் விரும்பும் சீர்திருத்தங்களை நாம் படத்தில் கூட செய்ய முடியவில்லை எனில் வேறு யார் படத்தில் செய்யப் போகிறோம்? என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் படக்குழுவினரின் எதிர்ப்பையும் மீறி அக்காட்சிகளை நீக்கினார். அதனால் இன்று தணிக்கை குழு கைத்தட்டி பாராட்டு தெரிவித்து U சான்றிதழ் வழங்கிய போது பட குழுவினர் மகிழ்ந்தனர். அதேசமயம் இன்று வரும் தமிழ் படங்களின் தலைப்பு எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பு முதலில் ஆங்கிலத்தில் தான் இருந்தது. பின் அதனையும் மறுத்துக் கூறி மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பை கொடுத்தேன். தமிழ் மெல்ல செத்து வரும் இந்த சூழ்நிலையில், அதைக் காப்பாற்றும் பொறுப்பு தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்த படத்தில் பங்கு பெற்று நான்கு பாடல்கள் எழுதியதில் நான் பெருமை அடைகிறேன். பிப்ரவரி 2ல் வெளியாக உள்ள படத்தை பாருங்கள். வேறு எதற்காக இல்லை என்றாலும் குழுவின் சமூக நோக்கத்திற்காக பாராட்டுங்கள் அது மற்றவர்களுக்கு நல்ல படங்களை தர ஊக்கம் கொடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.'பள்ளி குழந்தைகளைக் கெடுக்கும் காதல் இல்லை'..... மறக்குமா நெஞ்சம் படம் குறித்து பாடலாசிரியர் தாமரை!

இதன் மூலம் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் நல்ல ஃபீல் குட் படமாக உருவாகி இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே இந்த ஆண்டின் சிறந்த படங்களில் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ