Homeசெய்திகள்சினிமாஇன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி..... இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!

இன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி….. இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!

-

- Advertisement -

இயக்குனர் மோகன்ராஜா இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி..... இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான ஜெயம், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி..... இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!இதற்கிடையில் இவர் எம். குமரன் S/O மகாலட்சுமி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க அசின் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நதியா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அம்மா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் 20 வருடங்களுக்குப் பிறகு இன்று (மார்ச் 14) ரீ ரிலீஸாகிறது. எனவே இப்படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “இளைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ரீ ரிலீஸ் என்ற ட்ரெண்டையே நீங்கள் தான் உருவாக்குனீர்கள். ஒரு சின்ன மாற்றத்திற்காக ரீ- ரிலீஸ் செய்யப்படும் எம். குமரன் S/O மகாலட்சுமி படத்தை உங்க அம்மாவோடும் குடும்பத்தோடும் பாருங்கள். 20 வருடங்களுக்கு முன் அவர்கள் கொண்டாடிய படத்தின் தியேட்டர் அனுபவத்தை அவர்களுக்கு கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ