Homeசெய்திகள்சினிமாஎம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'ப்ரதர்'..... ரிலீஸ் அப்டேட்!

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!

-

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ப்ரதர் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'ப்ரதர்' படத்தின் ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. இதற்கிடையில் இவர் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கத்தில் ப்ரதர் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'ப்ரதர்'..... ரிலீஸ் அப்டேட்!மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைக்கிறார். கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ