தனுஷ் இயக்கத்தில் ராயன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வட சென்னையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மாஸான கேங்ஸ்டர் படமாக தயாராகி உள்ளது. மேலும் இந்த படத்தை 2024 கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். ப. பாண்டி படத்திற்குப் பிறகு தனுஷ் இயக்கி உள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதன்படி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து படக்குழுவினர் தினமும் ஒரு போஸ்டரை வெளியிட்டு கவனம் ஈர்க்கின்றனர். ஏற்கனவே எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன் , பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் அடுத்ததாக வரலட்சுமி சரத்குமாரின் போஸ்டரை ராயன் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Introducing @varusarath5 from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @prakashraaj @officialdushara @Aparnabala2 @kalidas700 @sundeepkishan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas… pic.twitter.com/UB5IE5QJ6O
— Sun Pictures (@sunpictures) February 26, 2024
வரலட்சுமி சரத்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக ராயன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.