Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆஃபிஸில் அடித்து நொறுக்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன்!

பாக்ஸ் ஆஃபிஸில் அடித்து நொறுக்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர், மிஸ்கின், யோகி பாபு, சரிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் பரத் சங்கர் இசையிலும் இந்த படம் உருவாகியுள்ளது. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் கதை ஆனது, எந்த ஒரு பிரச்சனைக்கும் போகாமல் கோழையாக வாழும் ஒரு இளைஞன் மக்களின் பிரச்சினைக்காக வீரனாக மாறுவதே மாவீரன் படத்தின் கதை ஆகும். மேலும் இது சமூக கருத்துக்களை கூறும் விதத்தில் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் தனது முந்தைய படத்தின் படங்களிலிருந்து சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பேண்டஸி கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளில் 7 கோடியை தாண்டிய நிலையில் தற்போது 4 நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு  மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இனிவரும் நாட்களிலும் இப்படம் வசூலை குவித்து வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ