Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் இருந்து விலகிய 'மாவீரன்'... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘மாவீரன்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, சுனில், சரிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

sivakarthikeyan-33.jpg

இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான முன்னோட்டம் மற்றும் Scene ah Scene ah பாடல் உள்ளிட்டவை சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இதற்கும் முன்னர் மாவீரன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14ஆம் தேதி மாவீரன் திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் தீபவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் வருடமாக இருக்க போகிறது

இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இன்று இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளன.

MUST READ