Homeசெய்திகள்சினிமாஅடித்து நொறுக்கும் 'மதகஜராஜா'.... தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்ததாக தகவல்!

அடித்து நொறுக்கும் ‘மதகஜராஜா’…. தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்ததாக தகவல்!

-

- Advertisement -

மதகஜராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.அடித்து நொறுக்கும் 'மதகஜராஜா'.... தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்ததாக தகவல்!

விஷால் நடிப்பில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக உருவாகியிருந்த திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர். சி இயக்கியிருந்தார். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. விஜய் ஆண்டனி இதற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் விஷால் உடன் இணைந்து சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் யாரும் எதிர்பாக்காத அளவில் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 50 கோடியை கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடித்து நொறுக்கும் 'மதகஜராஜா'.... தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்ததாக தகவல்!மேலும் இந்த படம் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. அடுத்தது இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சுந்தர். சி, விஷால் ஆகிய இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ