Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படம் குறித்து மதன் கார்க்கியின் முதல் விமர்சனம்!

‘கங்குவா’ படம் குறித்து மதன் கார்க்கியின் முதல் விமர்சனம்!

-

சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் குறித்து தனது முதல் விமர்சனத்தை தந்துள்ளார் மதன் கார்க்கி.'கங்குவா' படம் குறித்து மதன் கார்க்கியின் முதல் விமர்சனம்!

கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார் வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி இருக்கும் கங்குவா படமானது 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் மதன் கார்க்கி இந்த படம் குறித்து முதல் விமர்சனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, “கங்குவா முழு படத்தையும் பார்த்தேன். டப்பிங் செய்யும்போது ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. பிரம்மாண்டமான காட்சிகள், கதையின் ஆழம், இசையின் கம்பீரம் அனைத்தும் பவர் ஹவுஸ் சூர்யாவின் செயல் திறனுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. இயக்குனர் சிறுத்தை சிவா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இப்படி ஒரு அற்புதமான படைப்பை தந்ததற்காக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ