Homeசெய்திகள்சினிமாமாதவன், கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம்..... சிறப்பாக நடைபெற்ற பூஜை!

மாதவன், கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம்….. சிறப்பாக நடைபெற்ற பூஜை!

-

- Advertisement -

நடிகர் மாதவன், ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது தி டெஸ்ட் என்ற படத்திலும், தலைபிடப்படாத புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அதேசமயம் கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி 2 படமும் அதைத்தொடர்ந்து தேஜாஸ் படமும் வெளியானது. மேலும் எமர்ஜென்சி திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் இருவரும் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனா ரணாவத் தற்போது தமிழிலும் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.மாதவன், கங்கனா ரனாவத் நடிக்கும்  புதிய படம்..... சிறப்பாக நடைபெற்ற பூஜை!

சமீபத்தில் மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் இணைந்து தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. அதன்படி இந்த புதிய படத்தை கிரீடம், தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ எல் விஜய் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்ற இருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ