Homeசெய்திகள்சினிமாதாய்லாந்தில் குதூகலிக்கும் மடோனா... புகைப்படங்கள் வைரல்...

தாய்லாந்தில் குதூகலிக்கும் மடோனா… புகைப்படங்கள் வைரல்…

-

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருக்கும் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

மலையாள திரையுலகில் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்பட்ட திரைப்படம் பிரேமம். இத்திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கியிருப்பார். இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மடோனா செபாஸ்டியன். இத்திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான இவர், முதல் படத்திலேயே முத்திரை பதித்து ரசிகர்களின் மனதை வென்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழுக்கு அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த கவண் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்துபோகும் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இப்படம் பெரிதளவில் பேசப்பட்டது. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த பா பாண்டி, விஜய் சேதிபதியுடன் ஜூங்கா, விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில், தங்கையாக நடித்து அசத்தியிருப்பார். இதன் மூலம் தமிழில் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார் மடோனா. இந்நிலையில், தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ள மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ