Homeசெய்திகள்சினிமா'அலைபாயுதே' பட பாடலை ரீமேக் செய்த 'மெட்ராஸ்காரன்' படக்குழு!

‘அலைபாயுதே’ பட பாடலை ரீமேக் செய்த ‘மெட்ராஸ்காரன்’ படக்குழு!

-

மெட்ராஸ்காரன் படக்குழு அலைபாயுதே படத்தின் பாடலை ரீமேக் செய்துள்ளது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஷேன் நிகாம் நடித்துள்ள திரைப்படம் தான் மெட்ராஸ்காரன். 'அலைபாயுதே' பட பாடலை ரீமேக் செய்த 'மெட்ராஸ்காரன்' படக்குழு!இந்த படத்தில் ஷேன் நிகாமுடன் இணைந்து கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை வாலி மோகன் தாஸ் எழுதி இயக்க சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி படத்திலிருந்து டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகிய கவனம் ஈர்த்தது. 'அலைபாயுதே' பட பாடலை ரீமேக் செய்த 'மெட்ராஸ்காரன்' படக்குழு!அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த பாடலானது மாதவன் – ஷாலினி நடிப்பில் வெளியான அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு என்ற பாடலின் ரீமேக் ஆகும். மணிரத்னம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 'அலைபாயுதே' பட பாடலை ரீமேக் செய்த 'மெட்ராஸ்காரன்' படக்குழு!அதேசமயம் காதல் சடுகுடு பாடலும் இன்றுவரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாகும். இந்நிலையில் இந்த பாடலை மெட்ராஸ்காரன் படத்தில் ரீமேக் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ரீமேக் பாடல் நாளை (டிசம்பர் 7) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ