Homeசெய்திகள்சினிமாசர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தயாரான மகாராஜா

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தயாரான மகாராஜா

-

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், ஒரு காலக்கட்டத்தில் அவர் பல படங்களில் நடித்தாலும் அவரது முகம் கூட பலருக்கு தெரியவில்லை. இன்று தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது தமிழில் ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியானது. ஸ்ரீராம் ராகவன் இத்திரிரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்தில் கத்ரினா கைஃப் நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இதனிடையே, விஜய் சேதுபதி நடிக்கும் 50வது திரைப்படம் மகாராஜா

இத்திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அம்மு அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. அத்துடன், இத்திரைப்படம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,படம் திரைப்பட விழாவில் திரையிட, தயாராகி விட்டதாகவும், பின்னணி வேலைகள் நிறைவு பெற்று விட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ