Homeசெய்திகள்சினிமா'மகாராஜா' படத்தின் பிரம்மாண்ட வெற்றி.....எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த விஜய் சேதுபதி!

‘மகாராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி…..எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த விஜய் சேதுபதி!

-

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 'மகாராஜா' படத்தின் பிரம்மாண்ட வெற்றி.....எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த விஜய் சேதுபதி!அதே சமயம் இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக மகாராஜா திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் 55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்துள்ளது. மேலும் விஜய் சேதுபதி டிரெயின், காந்தி டாக்கீஸ், ஏஸ், விடுதலை 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடைசி விவசாய படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விண்ட் என்ற வெப் தொடரில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி முந்தைய படங்களுக்கு 17 கோடி வரை சம்பளம் கேட்டிருந்த நிலையில் மகாராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை 10 கோடியாக குறைத்துள்ளாராம்.'மகாராஜா' படத்தின் பிரம்மாண்ட வெற்றி.....எந்த ஒரு நடிகரும் செய்யாததை செய்த விஜய் சேதுபதி! ஏற்கனவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இனிமேல் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பலரும் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றி கண்ட பிறகும் எந்த ஒரு நடிகரும் செய்யாத காரியத்தை விஜய் சேதுபதி செய்துள்ளார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ