Homeசெய்திகள்சினிமாஓடிடியிலும் மகுடம் சூடிய 'மகாராஜா' ..... படக்குழுவினரை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

ஓடிடியிலும் மகுடம் சூடிய ‘மகாராஜா’ ….. படக்குழுவினரை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

-

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஓடிடியிலும் மகுடம் சூடிய 'மகாராஜா' ..... படக்குழுவினரை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!அதே சமயம் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றவர். இருப்பினும் சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்களை விட வில்லனாக நடித்து வெளியான படங்களே வசூல் வேட்டை நடத்தியது. ஆனால் விஜய் சேதுபதி 50வது படமான மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு சிறந்த படமாக கம்பேக் அமைந்துள்ளது. சொல்லப்போனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிங்கிளாக சம்பவம் செய்திருக்கிறார். ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதியிருந்தார் நித்திலன் சாமிநாதன். இவ்வாறு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வரும் மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், பட்டி நடராஜ், அபிராமி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 25 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் ஓடிடியிலும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், மகாராஜா படக்குழுவினரை பாராட்டியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ