Homeசெய்திகள்சினிமாஅஜித்தின் லைன் அப்பில் இணைந்த 'மகாராஜா' பட இயக்குனர்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அஜித்தின் லைன் அப்பில் இணைந்த ‘மகாராஜா’ பட இயக்குனர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

மகாராஜா படத்தின் இயக்குனர் அஜித்தின் லைன் அப்பில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித்தின் லைன் அப்பில் இணைந்த 'மகாராஜா' பட இயக்குனர்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித், அடுத்தடுத்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி அஜித்தின் 64வது படத்தை சிறுத்தை சிவா, விஷ்ணுவரதன், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அஜித்தின் லைன் அப்பில் இணைந்த 'மகாராஜா' பட இயக்குனர்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!இதற்கிடையில் வெங்கட் பிரபுவின் பெயரும் லிஸ்டில் இருக்கிறது. இந்நிலையில்தான் இயக்குனர் நித்திலன் சாமிநாதன், அஜித்தை சந்தித்து ஒரு வரி கதையை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நித்திலன் சாமிநாதன், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கியிருந்த மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் மகுடம் சூடிய நிலையில் சீனாவிலும் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் நித்திலன் சாமிநாதன், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் தகவல் ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ