Homeசெய்திகள்சினிமா'திரு. மாணிக்கம்' படம் குறித்து பேசிய மகாராஜா பட இயக்குனர்!

‘திரு. மாணிக்கம்’ படம் குறித்து பேசிய மகாராஜா பட இயக்குனர்!

-

- Advertisement -

மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன், சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் குறித்து பேசியுள்ளார்.'திரு. மாணிக்கம்' படம் குறித்து பேசிய மகாராஜா பட இயக்குனர்!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ராஜாகிளி, இட்லி கடை, வணங்கான் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் நந்தா பெரியசாமி இயக்கத்தில்
திரு. மாணிக்கம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.'திரு. மாணிக்கம்' படம் குறித்து பேசிய மகாராஜா பட இயக்குனர்! விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்க எம் சுகுமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். குடும்ப கதையில் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (டிசம்பர் 27) திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், ட்ரைலரும் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இந்த படம் குறித்து பேசி உள்ளார்.

அதன்படி அவர் பேசியதாவது, “திரு. மாணிக்கம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன். அதை பார்த்து முடித்து வெளியே வந்ததும் மனதிற்குள் அமைதியாக இருந்தது. நான் வாழ்க்கையில் என்னென்ன தவறு செய்தேன். என்னென்ன விஷயங்களை சரியாக செய்திருக்கிறேன். எந்தெந்த சூழலில் என்னை மாற்றிக் கொண்டேன் என்ற எல்லாத்தையும் யோசிக்க வைத்தது இந்த படம். மிகவும் அழுத்தமான மனிதநேயத்தை பற்றி இந்த படம் பேசுகிறது. மிகவும் புல்லரிப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ