Homeசெய்திகள்சினிமாஅந்த கதை கேவலமாக இருந்தது.... ரொமான்டிக் படம் குறித்து 'மகாராஜா' பட இயக்குனர்!

அந்த கதை கேவலமாக இருந்தது…. ரொமான்டிக் படம் குறித்து ‘மகாராஜா’ பட இயக்குனர்!

-

- Advertisement -

மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ரொமான்டிக் கதை குறித்து பேசி உள்ளார்.அந்த கதை கேவலமாக இருந்தது.... ரொமான்டிக் படம் குறித்து 'மகாராஜா' பட இயக்குனர்!கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதற்கு முன்னதாக நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த குரங்கு பொம்மை திரைப்படமும் திரில்லர் ஜானரில் எமோஷனல் கலந்த படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு நித்திலன் சாமிநாதன் இயக்கிய இரண்டு படங்களிலும் வலுவான கன்டென்ட் இருந்தது. எனவே ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதிலும் இவர் இயக்கியிருந்த மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சீனாவிலும் வசூலை வாரிக் குவித்தது. இதைத்தொடர்ந்து நித்திலன் சாமிநாதன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அந்த வகையில் இவர் சில முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நித்திலன் சாமிநாதனிடம் ரொமான்டிக் படம் இயக்குவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நித்திலன், “குரங்கு பொம்மை படத்தை முடித்த பிறகு ரொமான்டிக் கதை ஒன்றை எழுதினேன். ஆனால் அதை சில நாட்களிலேயே தூக்கி எறிந்து விட்டேன். அது கேவலமாக இருந்தது” என்றார்.

MUST READ