நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் விஜய் பாடல் ஒன்றை பாடி இருப்பதாகவும் நடிகை திரிஷா படத்தின் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருப்பதாகவும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் மற்றுமொரு புது தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது இந்த படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு திருவனந்தபுரம் சென்றுள்ளது. அங்கு படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக படப்பிடிப்பு ரஷ்யாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுதான் கடைசி கட்ட படப்பிடிப்பு எனவும் அத்துடன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் – இல் மகேந்திர சிங் தோனி நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தின் கிளைமாக்ஸ் -இல் கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இருப்பதாகவும் அந்த காட்சிகளில் தோனி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -