இனி ரசிகர்கள் தான் என் அம்மா, அப்பா… கண் கலங்கிய மகேஷ் பாபு….
டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வௌியாகி ரசிகர்ளிடையே வரவேற்பை பெற்றது. இதில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் குண்டுர் காரம். இது மகேஷ் பாபுவின் 28-வது படமாகும். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். நடிகர் மகேஷ் பாபு ஏற்கனவே, திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அத்தாடு, கலேஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு, என் திரைப்படம் சங்கராத்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் தான். அது இந்த வருடமும் தொடரும் என நம்புகிறேன். ஆனால், இந்த சங்கராத்திக்கு என் அப்பா என்னுடன் இல்லை. ஆனால், தற்போது எனக்கு அப்பா, அம்மா எல்லாமே என் ரசிகர்களாகிய நீங்கள் தான் என கண்கலங்கி பேசினார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணா ரமேஷ் பாபு மற்றும் அம்மா இந்திரா தேவி, அப்பா கிருஷ்ணா ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.