குண்டூர் காரம் ஹிட்… அடுத்த படத்திற்கு தயாராகும் மகேஷ்பாபு…
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கடைசியாக சர்க்காரு வாரி பட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வௌியாகி ரசிகர்ளிடையே வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய படம் குண்டூர் காரம். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி இருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு ஏற்கனவே, திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் அத்தாடு, கலேஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கிறது. மேலும், இது மகேஷ் பாபு நடிக்கும் 28-வது படமாகும். இத்திரைப்படம் சங்கராத்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாள் முதலே படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கான ஜெர்மனியில் உள்ள பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று உடல் ரீதியாகவும், சண்டை க்காகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். விரைவில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.