Homeசெய்திகள்சினிமாபோச்சர் வெப் தொடர் பார்த்து கதிகலங்கிப்போன மகேஷ்பாபு

போச்சர் வெப் தொடர் பார்த்து கதிகலங்கிப்போன மகேஷ்பாபு

-

- Advertisement -
போச்சர் வெப் தொடரை பார்த்து மிரண்டுபோன நடிகர் மகேஷ்பாபு, படம் குறித்து சமூக வலைதளங்தளில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காலத்திற்கு பிறகு திரைப்படங்களை காட்டிலும் வெப் தொடர்களின் எண்ணி்க்கை அதிகரித்துள்ளது. அதேபோல, வெப் தொடர்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திரைப்படங்களுக்கு இருக்கும் சென்சார் பிரச்சனைகள் வெப் தொடர்களுக்கு இல்லாத காரணத்தால், ஒரு சில காட்சிகள் ராவாக காட்டப்படுகின்றன. சில சமயங்களில் இது பிரச்சனையை ஏற்படுத்தினாலும். சில சமயங்களில் அக்காட்சிகள் பாராட்டை பெறுகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வெப் தொடர் போச்சர்.

இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வௌியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்த தொடர் வெளியீட்டில் தன்னை இணைத்துக்கொண்டு புரமோசன் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டார். ரிச்சி மேத்தா என்பவர் இந்த வெப் தொடரை இயக்கி இருக்கிறார். இதில் ரோஷன் மேத்யூ மற்றும் நிமிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை நிமிஷா விஜயன் இதற்கு முன்பாக, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

தந்தங்களுக்காக யானைகள் கொடூரமாக கொல்லப்படுவதயைும், அதன் பின்னால் நடக்கும் அரசியலையும் மையப்படுத்தி இந்த தொடர் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தொடரை பார்த்துள்ள நடிகர் மகேஷ்பாபு, எப்படி ஒருவரால் இப்படி செய்ய முடிகிறது? அவர்களது கைகள் நடுங்கவில்லையா? போச்சர் தொடரை பார்த்தபின் இது போன்ற கேள்விகள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

MUST READ