தெலுங்கில் பட்டையை கிளப்பும் குண்டூர் காரம்… வசூல் வேட்டை…
- Advertisement -
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வௌியாகி இருக்கும் குண்டூர் காரம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.

டோலிவுட் எனும் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தெலுங்கில் அவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அதேபோல, மகேஷ் பாபுவின் திரைப்படங்கள் பெரும்பாலும் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் வௌியிடப்படும். கோலிவுட்டிலும் மகேஷ் பாபுவுக்கு ரசிகர்கள் ஏராளம். மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

இதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் குண்டுர் காரம். இது மகேஷ் பாபுவின் 28-வது படமாகும். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகியுள்ளார். படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். படத்தில் ஜெகபதி பாபு, மீனாட்சி சௌத்ரி, சுனில், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் மகர சங்கராத்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி தெலுங்கு மொழியில் வௌியானது.

இத்திரைப்படம் வெளியான நாள் முதலே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 150 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவானது. தற்போது படம் வெளியாகி 3 நாட்களில் சுமார் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 97 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது.