Homeசெய்திகள்சினிமாபண்டிகை கால ரிலீஸ் தேதியை லாக் செய்த மகேஷ் பாபு.... 'குண்டூர் காரம்' அப்டேட்!

பண்டிகை கால ரிலீஸ் தேதியை லாக் செய்த மகேஷ் பாபு…. ‘குண்டூர் காரம்’ அப்டேட்!

-

- Advertisement -

பண்டிகை கால ரிலீஸ் தேதியை லாக் செய்த மகேஷ் பாபு...'குண்டூர் காரம்' அப்டேட்!பான் இந்தியா திரைப்படங்கள் என்னும் பெயரில் பல திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றாலும், ஒரு சில படங்கள் அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதமான காட்சிகளை உள்ளே திணித்து இறுதியில் ரசிகர்களை கவரத் தவறிவிடுகின்றன. அத்தகைய பான் இந்திய படமாக இல்லாமல், முழுக்க முழுக்க மாஸ் மசாலா ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள படம் “குண்டூர் காரம்”. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “அலா வைகுந்த புரமுலோ” என்ற மாபெரும் ஹிட் படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் இயக்கியுள்ளார். ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸாகி மாஸான வரவேற்பைப் பெற்றது. படத்தின் தம் மசாலா, ஓ மை பேபி போன்ற பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. ஒரு ஸ்டைலிஷான அதே வேளையில் கிராமப்புற கதையை மையமாகக் கொண்ட, பக்காவான ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது. பொங்கல் தினத்திற்கு வெளியாகும் மகேஷ்பாபுவின் 7வது திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னர் டக்கரி தொங்கா(2002), ஒக்கடு (2003-தமிழில் கில்லி), பிசினஸ் மேன் (2013), சீதாம்மா வாகிட்லோ சிறு மெல்லு செட்டு (2013), ஒன் நேநொக்கடேன் (2014), சரிலேரு நீக்கெவரு (2020) போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன.பண்டிகை கால ரிலீஸ் தேதியை லாக் செய்த மகேஷ் பாபு...'குண்டூர் காரம்' அப்டேட்!

நிச்சயமாக பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்கும்படியான ஒரு படமாக “குண்டூர் காரம்” இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படம் மட்டுமின்றி தெலுங்கில் எதிர்பார்ப்புள்ள ரவி தேஜாவின் “ஈகிள்”, “ஹனுமன்” எனும் சூப்பர் ஹீரோ படம், நாகர்ஜுனாவின் “நா சாமி ரங்கா”, விஜய் தேவரகொண்டாவின் 13 வது படம் போன்ற படங்களும் பொங்கல் ரிலீசுக்கு தான் குறி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தெந்த படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் அல்லது எந்தெந்த படங்கள் ரேஸிலிருந்து விலகிக் கொள்ளும் என்பதை விரைவில் தெரிந்து கொள்வோம்.

MUST READ