Homeசெய்திகள்சினிமாஇரண்டு பாகங்களாக வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன்

இரண்டு பாகங்களாக வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன்

-

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், லாலேட்டனாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் அண்மையில் தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். மலையாளத்தில் நெரு என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, லூசிபர் 2 எம்புரான் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், லண்டன், கேரளா என அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது தவிர, வ்ருஷபா, உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இதற்கிடையே, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்குகிறார். இதில் மோகன்லாலுடன் இணைந்து சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரசாந்த் பிள்ளை இதற்கு இசை அமைக்கிறார்.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னோட்டம் அண்மையில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ