தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து நடிகை மாளவிகா மோகனன் மனம் நெகிழ்ந்த பதிவு வெளியிட்டுள்ளார்.
விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இது கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய படமாகும்.தொடக்கத்தில் படப்பிடிப்பின் போது விக்ரம் இருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் கடப்பா சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. அதையடுத்து படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
“நான் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் வந்த ஒரு படம், இதுவரை இல்லாத வகையில் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னுடைய உச்ச பட்சத்தை சோதித்துப் பார்த்த படம்.
திறமையான கலைஞர்கள் சிலருடன் நான் இணைந்து நடித்த படம். யார் என்று சொல்ல அவசியமில்லை. பா ரஞ்சித் மற்றும் விக்ரம் மற்றும் மற்ற படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டீர்கள். என்னுடைய அடுத்த இலக்கை மிகவும் மேலே உயர்த்தி வைத்துவிட்டீர்கள். இப்போது நான் எப்படி அதை எட்டி பிடிப்பேன். இறுதியாக இது ஒரு திரைப்படம் முடிவடைந்து நான் சில நாட்களுக்கு மன உளைச்சலில் இருக்கப் போகிறேன். ரத்தம், வியzர்வை மற்றும் கண்ணீர் ஒரு படமாக இருந்தால், அது உண்மையில் இந்தப் படமாகத் தான் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.