படப்பிடிப்புக்கு பின்பும் சிலம்பம் பயிற்சியில் மாளவிகா மோகனன்
கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படம் மூலம் தமிழில் களமிறங்கினார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா, படத்திற்காக சிலம்பம் உள்படதற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காகப் பயிற்சி எடுக்கும் காணொளிகளையும் அவ்வப்போது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனுடன், அண்டை வீட்டில் வசிக்கும் தோழியும் பங்கேற்றுள்ளார். இருவரும் சேர்ந்து காணொளிகள் வெளியிட்டு வருகின்றனர். இது வைரலாகி வருகிறது.