விஜய் நடிக்கும் கடைசி படம்… ஜோடியாகும் மலையாள பிரபலம்…
- Advertisement -
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் கோலிவுட் நாயகன் விஜய். தளபதி என்று அழைக்கப்படும் அவர் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். விஜய் படங்கள் வெளியீடு என்றாலே அன்று தமிழ்நாடே கொண்டாட்டம், கோலாகலம் என விழாக்கோலம் பூண்டிருக்கும். அதற்கு ஏற்ப நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழை தாண்டி விஜய்யின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாவதால், அங்கும் அவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம்
கடந்த ஆண்டு லியோ படத்தை கொடுத்த நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு தி கோட் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யார் இயக்குநர், தயாரிப்பாளர் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் ஆவார்.