Homeசெய்திகள்சினிமாமலையாள இளம் நடிகை மரணம்... ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி...

மலையாள இளம் நடிகை மரணம்… ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி…

-

மலையாள சினிமாவின் பிரபல இளம் நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள சினிமாவில் வௌியாகும் ஒவ்வொரு படத்திலும் புது முகங்கள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில், ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் லக்‌ஷ்மிகா சஜீவன். இவருக்கு வயது 24 ஆகும். வங்கியில் வஏலை பார்த்துக் கொண்டிருந்தபோதே, சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த சவுதி வெள்ளக்கா, பார்வதி நடிப்பில் வெளியான உயரே உள்ளிட்ட படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படங்களின் மூலம் மலையாள சினிமாவில் அவர் புகழ் பெற்றார். முகம், தோற்றம் என அனைத்தையும் மாற்றி முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் லக்‌ஷ்மிகா சஜீவன் நடித்திருப்பார். இரண்டு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கியில் பணிபுரிந்து வந்தபோது இவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இளம் வயதிலேயே நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரழந்தது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை லக்‌ஷ்மிகா சஜீவனின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ