Homeசெய்திகள்சினிமாநிவின் பாலி நடித்த மலையாளி ஃப்ரம் இந்தியா... ஓடிடி அப்டேட் இதோ..

நிவின் பாலி நடித்த மலையாளி ஃப்ரம் இந்தியா… ஓடிடி அப்டேட் இதோ..

-

நிவின் பாலி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர். அதற்கு முன்னதாக தமிழில் நேரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தங்க மீன்கள் பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கியுள்ளார். நிவின் பாலி உடன் இணைந்து அஞ்சலி சூரி மற்றும் பலர் நடிக்கும் உள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், இறுதியாக இவர் நடித்திருந்த படவெட்டு, துறைமுகம் உள்ளிட்ட திரைப்படங்கள் நேர்மறையான விமர்சனங்களை பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து நிவின் பாலி நடிப்பில் வெளியான புதிய திரைப்படம் மலையாளி ஃப்ரம் இந்தியா. ஜன கண மன படத்தை இயக்கி புகழ்பெற்ற ஜோஸ் ஆண்டனி இப்படத்தை இயக்கி உள்ளார்
படத்தில் நிவின் பாலியுடன் தியான் ஸ்ரீனிவாசன், அனஸ்வர ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூலை 5-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வௌியாக உள்ளது.

MUST READ