ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினி, நெல்சன், அனிருத் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. அதேசமயம் ரஜினியும் கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதற்கிடையில் ஜெயிலர் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோரும் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய தகவல் என்னவென்றால் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்திருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து சுராஜ் வெஞ்சரமூடு, செம்பன் வினோத், சுஜித் சங்கர் ஆகியோரும் இப்படப்பிடிப்பில் இடைந்துள்ளார்கள் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.