மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசக்கூடிய படம் மாமன்னன்.
சமூக நீதி மற்றும் சமத்துவம் சார்ந்த உண்மைகளை மிகத் தெளிவாக கூறியுள்ளது. மேலும் மாரி செல்வராஜ், சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய சொல்வதற்கு சற்று சிக்கலான சமதர்ம சூத்திரத்தை தன் கையில் எடுத்து அதை தன் பாணியில் படமாக்கி இருக்கிறார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் இப்படம் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் ‘நாயகுடு’ என்ற பெயரில் தெலுங்கில் இன்று வெளியாகிறது.