Homeசெய்திகள்சினிமாதலைவர் 171 படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?.... அவரே கொடுத்த விளக்கம்!

தலைவர் 171 படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?…. அவரே கொடுத்த விளக்கம்!

-

- Advertisement -

தமிழ் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது படத்தில் தற்போது நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறி இருக்கிறார். தலைவர் 171 படத்தில் மம்மூட்டி நடிக்கிறாரா?.... அவரே கொடுத்த விளக்கம்!இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைவர் 171 படத்தில் மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மம்மூட்டி, “நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். ஆனால் அது உண்மை இல்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். ஆனால் இதுவரை அழைப்பு வரவில்லை. அப்படி அழைப்பு வந்தால் நல்லது இல்லை என்றாலும் பரவாயில்லை” என்று கூறி இருக்கிறார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தில் ரஜினியும் மம்மூட்டியும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ