Homeசெய்திகள்சினிமாஆஸ்திரேலிய நாட்டில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு அங்கீகாரம்

ஆஸ்திரேலிய நாட்டில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு அங்கீகாரம்

-

- Advertisement -
மலையாளத் திரை உலகின் பிரபல நடிகர் மம்முட்டி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ‘பிரமயுகம்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது.

அத்துடன் அந்த போஸ்டரில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அவர் நடிப்பில் ‘கண்ணூர் ஸ்குவாட்’ என்ற திரைப்படம் அண்மையில் வௌியானது. 80 கோடி ரூபாய்க்கு வசூலித்து சாதனை படைத்து வருகிறது. மம்முட்டியின் கலை சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவரது சிறப்பு தபால் தலை, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி, பிரன்ட்ஸ் ஆப் இந்தியா தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு மம்முட்டியின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டனர். அதனை இந்தியாவின் தலைமை ஆணையர் மன்பிரீத் வோரா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் “மம்முட்டி இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருப்பதாகவும், அவரது கலை சேவையை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். இதனை ரசிகர்களும், மலையாளிகளும் கொண்டாடி தீர்க்கின்றனர்.

MUST READ